Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிமுக்கிய அதிகாரி இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிமுக்கிய அதிகாரி இலங்கை விஜயம்

0

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக பணிப்பாளர் ஒருவர் நாட்டிற்கு வருகை தர உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக பணிப்பாளர் கீதா கோபிநாத் இந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வருகை தர உள்ளார்.

நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘இலங்கையின் பொருளாதாரத்தை மறுசீரமைத்தல்: கடன் மற்றும் நிர்வாகம்’ என்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகவும் அவர் பங்கேற்கவுள்ளார்.

நிர்வாக சீர்திருத்தங்கள்

இந்த மாநாடு, பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது, கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி சிந்திப்பதையும், வரவிருக்கும் சவால்களில் கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்தோடு, விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக பணிப்பாளர் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். 

NO COMMENTS

Exit mobile version