Home இலங்கை சமூகம் புத்தாண்டு கால எண்ணெய் பூசும் சடங்கு :153 வயது ஆமை தேர்வு

புத்தாண்டு கால எண்ணெய் பூசும் சடங்கு :153 வயது ஆமை தேர்வு

0

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள மிகவும் வயதான 153 வயது இராட்சத ஆமை, ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 9:04 மணிக்கு நடைபெறவிருக்கும் பாரம்பரிய புத்தாண்டு எண்ணெய் தேய்ப்பு விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் செயல்பாட்டு பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி தெரிவித்தார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வருபவர்கள் இந்த விழாவைக் காண முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

400 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ள ஆமை

யானைகள், வரிக்குதிரைகள், நீர்யானைகள், சிம்பா என்ற சிங்கக் குட்டி, மான் மற்றும் பல பறவை இனங்களும் தலையில் எண்ணெய் பூசும் சடங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.

“400 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ள ஆமை, மிருகக்காட்சிசாலையில் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பிரியதர்ஷினி கூறினார்.

இந்த ஆமை 1930 ஆம் ஆண்டு மிருகக்காட்சிசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  

NO COMMENTS

Exit mobile version