Home முக்கியச் செய்திகள் இலங்கைக்கு களங்கத்தை விளைவிக்கும் சமூக ஊடகப் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கைக்கு களங்கத்தை விளைவிக்கும் சமூக ஊடகப் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை

0

இலங்கையின் நற்பெயருக்கு எதிர்மறையாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகளை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

  வெலிகம சுற்றுலா கடல் பகுதியில் பாம்பு விளையாட்டு விளையாடும்போது போது உள்ளூர் நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளியை இடுகையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி குறித்து சமூக ஊடக தளங்களுக்கு எச்சரிக்கை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.

பின்னர், முறையான முறைப்பாட்டைத் தொடர்ந்து அந்த காணொளி நீக்கப்பட்டது.

சுற்றுலா பணியகத்தின் கவலை

வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக இணையத்தில் சமீபத்தில் பகிரப்பட்ட மற்றொரு காணொளி குறித்தும் பணியகம் கவலை தெரிவித்துள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையில் அதன் சாத்தியமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் ஹேவாவசம் தெளிவுபட தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version