Home சினிமா டூரிஸ்ட் ஃபேமிலி 12 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டூரிஸ்ட் ஃபேமிலி 12 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

டூரிஸ்ட் ஃபேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி கடந்த மே 1ம் தேதி திரைக்கு வந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் நடித்திருந்தார். சென்சிட்டிவான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 12 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இதுவரை ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ளது மாபெரும் வசூலாகும். மேலும் இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/tourist-family-12-days-box-office-1747112357

NO COMMENTS

Exit mobile version