டூரிஸ்ட் ஃபேமிலி
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள திறமையுள்ள நடிகர்களில் ஒருவர் சசிகுமார். அயோத்தி, கருடன், நந்தன் ஆகிய தரமான படங்களின் வரிசையில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் இடம்பிடித்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் கமலேஷ், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பகவதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
திருநங்கை அழகிப்போட்டி.. மயங்கி விழுந்த நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 43 கோடி வசூல் செய்து சென்சேஷனல் ஹிட்டாகியுள்ளது.
