Home சினிமா டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

0

டூரிஸ்ட் ஃபேமிலி

சசி குமார், சிம்ரன் இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவனித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. குட் நைட், லவ்வர் போன்ற தரமான திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளிவந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வெளிவந்தது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் பட அப்டேட்.. வெறித்தனமான சம்பவம்!

வருகிற மே 1ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் சமீபத்தில் திரையிடப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்த முக்கிய நபர்கள் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

முதல் விமர்சனம்

அப்படி லைகா தயாரிப்பு நிறுவனம் ஹெட் தமிழ் குமரன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு மிக சிறப்பான திரைப்படம் என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

அதே போல் இப்படத்தை பார்த்த திரையரங்க உரிமையாளர்களும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். மேலும் திரையுலக பிரபலங்கள் இயக்குநர் TJ ஞானவேல், மணிகண்டன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். இதன்மூலம் படம் சிறப்பான தரமான சம்பவமாக 2025 தமிழ் சினிமாவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version