Home சினிமா உலகளவில் சிறந்த திரைப்படங்கள் பட்டியல்.. டாப் 10ல் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி

உலகளவில் சிறந்த திரைப்படங்கள் பட்டியல்.. டாப் 10ல் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி

0

டூரிஸ்ட் ஃபேமிலி

2025ல் தமிழ் சினிமாவில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 91 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் சாதனை படைக்கும் Jurassic World Rebirth.. 2 நாட்களில் இத்தனை கோடியா

சிறந்த திரைப்படங்கள் பட்டியல்

உலகளவில் உள்ள விமர்சகர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யும் முன்னணி தங்களில் ஒன்று தான் Letterboxd. இந்த தளத்தில் 2025ல் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் டாப் 10 குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் முதலிடத்தை Sinners திரைப்படம் பிடித்துள்ளது. இந்த டாப் 10ல் 9வது இடத்தை தமிழ் திரைப்படமான டூரிஸ்ட் பேமிலி பிடித்துள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பிடித்த ஒரே படமும் இதுவே ஆகும். 

NO COMMENTS

Exit mobile version