Home இலங்கை சமூகம் ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை – வெளியான தகவல்

ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை – வெளியான தகவல்

0

மன்னார் – தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு மண் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச்
செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இப்படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22) மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இத்திட்டம் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.  

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி

அத்துடன் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமான இந்த
திட்டத்தை வெகு விரைவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் குழு ஒன்று
நிறுவப்பட்டுள்ளது.

பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம்

அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் எண்ணிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் கூட்டத்தில் கூறப்பட்டது.

  

அடுத்த கட்டமாக சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில்
தீர்மானிப்பது எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு காணப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்திநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

https://www.youtube.com/embed/Z5TCe505Z44

NO COMMENTS

Exit mobile version