Home இலங்கை குற்றம் வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0

போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயதான இளைஞனை அழைத்து செல்லும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதற்கமைய இரண்டு பெண்கள் உட்பட குறித்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

குடிவரவு அதிகாரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் ஆவணங்களை பரிசோதிக்கப்பட்டன.

இதன் காரணமாக அவர்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையின் போது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவன் தன்னுடன் வந்த பெண் தமது தாய் இல்லை என்றும், தமது தாய் இன்னும் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

பொருளாதார நெருக்கடி

இந்தநிலையில் இரண்டு பெண்களையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்திய போது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், குழந்தையின் முன்னேற்றத்திற்காகவும் சிறுவனை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் விபரங்களின் அடிப்படையில் சிறுவன் மற்றும் பெண்ணின் பயண ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளதை கண்டறிந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையிலும் இதேபோன்ற சம்பவம் ஒன்றின்போது மலேசியாவுக்கு சென்று நாடு கடத்தப்பட்ட சிறுவன் மற்றும் ஆண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல்- சிவா மயூரி

ரணில் – மைத்திரி இரகசிய சந்திப்பு : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version