Home இலங்கை சமூகம் திருகோணமலையில் மாணவர்களை ஏற்றி சென்ற காரில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிப்பு

திருகோணமலையில் மாணவர்களை ஏற்றி சென்ற காரில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிப்பு

0

திருகோணமலையில் (Trincomalee) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக, கந்தளாய் சிரேஷ்ட
காவல் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் கந்தளாய்
பிரதான வீதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அச்சோதனையின் போது, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச்
சென்ற கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

அதில் 40 வெளிநாட்டு
சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு கந்தளாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கந்தளாய்
போக்குவரத்து காவல்துறை அத்தியட்சகர் ஏ.டி.எம்.எஸ்.டி. பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version