Home இலங்கை சமூகம் தென்னிலங்கையில் ஏற்படவிருந்த பாரிய விபத்து – இளைஞர்களின் செயலால் தவிர்ப்பு

தென்னிலங்கையில் ஏற்படவிருந்த பாரிய விபத்து – இளைஞர்களின் செயலால் தவிர்ப்பு

0

கரையோர ரயிலின் வஸ்கடுவ பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து, பிரதேச இளைஞர்கள் இருவரின் விழிப்புணர்வினால் தவிர்க்கப்பட்டதாக வாதுவ ரயில்வே பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறையில் இருந்து கொழும்புக்கு செல்லும் மேல் பாதையின் இணைப்பில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை வஸ்கடுவ பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவதானித்துள்ளனர்.

அதற்கமைய, வாதுவ ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

ரயில் பாதையில் வெடிப்பு

இதன் காரணமாக பிரதான ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்ததுடன், வாதுவ வீதிப் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை ரயில் பாதையை சரிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

புனரமைப்பின் போது கடலோர ரயில்வேயின் மேல் ரயில் பாதையை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று ஏற்படவிருந்த மிகப் பெரிய ரயில் விபத்து இரு இளைஞர்களின் செயற்பாடு காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version