Home இலங்கை சமூகம் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் தொடருந்து ஓட்டுநர்கள்

48 மணிநேர வேலைநிறுத்தத்தில் தொடருந்து ஓட்டுநர்கள்

0

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(20.06.2025) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொடருந்து ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

தொடருந்து ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பல பிரச்சினைகள் காரணமாக இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொடருந்து ஓட்டுநர்கள் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்றவற்றை சமாளிப்பதற்கு சம்பள உயர்வை கோருகின்றனர்.

உடன்பாடு எட்டப்படவில்லை

இந்நிலையில், பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம், தொடருந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை உடன்பாடொன்று எட்டப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version