Home இலங்கை சமூகம் யாழ். கொழும்பு தொடருந்து சேவை – திணைக்களம் வெளியிட்ட தகவல்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – திணைக்களம் வெளியிட்ட தகவல்

0

கொழும்பிலிருந்து (colombo) யாழ். காங்கேசன்துறைக்கு ஐந்தரை மணித்தியாலங்களில் செல்ல முடியும் என திட்ட பணிப்பாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – மஹவ பகுதியின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குறித்த பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்து பயணிக்குமென திட்டப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

3,000 கோடி ரூபா (92 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் புனரமைக்கப்பட்ட அநுராதபுரம் – மஹவ தொடருந்து பாதை கடந்த (12) தொடருந்து திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள்

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடருந்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென தொடருந்து திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையில் செல்லும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராகம ஊடாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் காலதாமதமாக இயங்குவதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version