Home இலங்கை சமூகம் யாழ். கொழும்பு தொடருந்து சேவை – முக்கிய அறிவிப்பு

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – முக்கிய அறிவிப்பு

0

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு தொடருந்து பாதையில் தொடருந்துகள் குறைந்த வேகத்தில் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலி தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் அநுராதபுரம் (Anuradhapura) வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி தொடருந்துகளின் வேகம் மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தொடருந்து தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ளது.  

வடக்கு தொடருந்து பாதை

அந்தவகையில், மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையை வரும் 22ம் திகதி திறக்க தொடருந்து பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முழுமையடையாத பழுதுகளை சரி செய்ய ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் தொடருந்தை இயக்கவும் பொது மேலாளர் அறிவுறுத்தினார்.

இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/train-service-between-jaffna-to-colombo-time-1728621376

NO COMMENTS

Exit mobile version