Home இலங்கை சமூகம் கொழும்பு – காங்கேசன்துறை இடையே தொடருந்து சேவை ஆரம்பம்

கொழும்பு – காங்கேசன்துறை இடையே தொடருந்து சேவை ஆரம்பம்

0

இம்மாதம் 31ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4:35 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்கு புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version