Home இலங்கை சமூகம் திருகோணமலை மாவட்ட அஹதியா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம்

திருகோணமலை மாவட்ட அஹதியா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம்

0

Courtesy: H A Roshan

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அஹதியா பாடசாலைகளின் மத்திய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருகோணமலை மாவட்ட அஹதியா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன. 

குறித்த பயிற்சி திட்டமானது இன்று (06.07.2024)கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

பயிற்சித் திட்டம்

இதன்போது, நற்பிரஜைகளை உருவாக்குவதில் அஹதிய்யா கல்வியின் முக்கியத்துவம், இலக்குகள், பாடப்பரப்பு மற்றும் நோக்கங்கள், மாணவர்களை மையமாகக் கொண்ட வினைத்திறன்மிக்க கற்பித்தல் முறைமைகள், முகாமைத்துவத்திற்கான உத்திகள் போன்ற பல விடயங்கள்  தெளிவூட்டப்பட்டுள்ளன. 

மேலும், இந்நிகழ்வானது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

Source: https://tamilwin.com/article/training-program-teachers-ahatiya-schools-trinco-1720283940

NO COMMENTS

Exit mobile version