Home இலங்கை அரசியல் ரணிலின் உடல்நிலை குறித்து சிறைச்சாலை வைத்தியர்கள் வெளியிட்டுள்ள தகவல்

ரணிலின் உடல்நிலை குறித்து சிறைச்சாலை வைத்தியர்கள் வெளியிட்டுள்ள தகவல்

0

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் அதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடல் நிலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய அவருக்கு வீட்டு உணவை வழங்குவதற்கான அனுமதியை சிறைச்சாலை தலைமையகம் வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version