Home இலங்கை சமூகம் பல நாட்களின் பின்னர் கிளிநொச்சி-முல்லைத்தீவுக்கான போக்குவரத்து ஆரம்பம்

பல நாட்களின் பின்னர் கிளிநொச்சி-முல்லைத்தீவுக்கான போக்குவரத்து ஆரம்பம்

0

கிளிநொச்சி- முல்லைத்தீவுக்கான போக்குவரத்து 25 நாட்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டித்வா பேரிடரால் ஏற்பட்ட வெள்ள
அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி- ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம்
மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் பெரும்
பாதிப்புக்குள்ளானது.

இதன் காரணமாக கிளிநொச்சி- முல்லைதீவு மாவட்டங்களுக்கான
போக்குவரத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு
வந்தது.

பாலத்தின் புனரமைப்பு 

இந்தநிலையில், குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (23.12.2025)  துரித கதியில் நிறைவடைந்ததை அடுத்து  மீண்டும்
இந்த வீதி ஊடான போக்குவரத்து இணைக்கப்பட்டு மக்கள் இந்த வீதியூடான
போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த
பாலத்தின் ஊடாக பயணிப்பவர்கள் வீதி சமிக்ஞைகளை பின்பற்றி அதிக வேகத்தில்
வாகனத்தை செலுத்தாது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்
தெரிவித்துள்ளனர்.

துரித கதி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
எஸ்.ஜெயசங்கர் காணொளி மூலம் திறந்து வைத்திருந்தார்.

குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து துரித கதியில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

NO COMMENTS

Exit mobile version