Home முக்கியச் செய்திகள் வழமைக்கு திரும்பிய கொழும்பு- குருணாகல் பிரதான வீதியின் போக்குவரத்து!

வழமைக்கு திரும்பிய கொழும்பு- குருணாகல் பிரதான வீதியின் போக்குவரத்து!

0

நாட்டில் சில பிரதான போக்குவரத்து வழிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு- குருணாகல் பிரதான வீதி, கொழும்பு- கட்டுகஸ்தோட்டை ஊடான கண்டி வீதி மற்றும் குருணாகல்- பாதெனிய ஊடாக அநுராதபுரம் வீதி என்பன வழமைக்கு திரும்பியுள்ளன.

தொடர் மண்சரிவு

தற்போது நாட்டில் மழைநிலைமை தொடரவில்லை எனினும் கூட தொடர் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் கடந்து தினங்களாக தொடர்ந்தும் ஏற்பட்டு வந்த சீரற்ற வானிலை காரணமாக பல வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version