Home இலங்கை சமூகம் லெபனான் மற்றும் சிரியாவிற்கான பயணம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்

லெபனான் மற்றும் சிரியாவிற்கான பயணம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்

0

லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவில் (Syria) தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை இலங்கை பிரஜைகள் அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 

இதற்கமைய, தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அவசர அழைப்புகள் 

மேலும், அவர்கள் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள இலங்கையின் தூதரகத்துடன் வழக்கமான தொடர்புகளை பேணுவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்படி, slemb.beiruit@mfa.gov.lk என்னும் மின்னஞ்சல் முகவரி அல்லது 0094 771102510 – சனத் பாலசூரிய, 0094 718381581 – பிரியங்கி திஸாநாயக்க, 00961 81485809 – ஃபஹத் ஹவ்வா ஆகிய அவசர தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, டமாஸ்கஸில் உள்ள இலங்கையின் கெளரவத் தூதரக அதிகாரி டொக்டர். அல் ட்ரூபியின் mmd@aldroubi.com என்னும் மின்னஞ்சல் முகவரி அல்லது 00963 944499666, 00963 933858803 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version