Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலை:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

சீரற்ற காலநிலை:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

0

ஹட்டன்-மஸ்கெலியா, நிவ்வெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று  (30) மாலை இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீதே மரம் முறிந்து விழுந்துள்ளது.

பலத்த சேதம்

மரம் முறிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும், இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், மரம் வெட்டப்படும்
வரை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியில் போக்குவரத்து
முற்றிலுமாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version