Home இலங்கை சமூகம் நாட்டை உலுக்கிய கோர விபத்து! உயிரிழந்தவர்களுக்கு மாநகரசபை அமர்வில் அஞ்சலி!

நாட்டை உலுக்கிய கோர விபத்து! உயிரிழந்தவர்களுக்கு மாநகரசபை அமர்வில் அஞ்சலி!

0

இராவண எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு
வவுனியா மாநகரசபையின் (Vavuniya) அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 4ஆம் திகதி இரவு எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் தங்காலை
நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 15 பேர்
உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக வவுனியா மாநகரசபையின் இன்றைய அமர்வில்
அஞ்சலி செலுத்தப்பட்டது.

சபையில் அஞ்சலி 

இதன்போது சபையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி
அஞ்சலி செலுத்தப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற எல்ல பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தும் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version