Home இலங்கை சமூகம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி

0

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை
நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள்
4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற
இடத்தில்  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மலர்தூவி அஞ்சலி

இந்த விமானத்தாக்குதல் கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள
செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன் , இளைஞர்கள்,
பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை
செலுத்தியிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version