Home இலங்கை சமூகம் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்!

உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்!

0

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்,தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின்
சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும்
மே 12தொடக்கம் 18வருரையில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த
பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும்
முன் வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த ஜனாதிபதி வரலாறு தெரியாத எங்கள் இளம் சமூகத்திடம் தன்னை நல்லவராக
காட்டும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருகின்றார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வெளித்தோற்றத்தில் தன்னை
நல்லவராக காட்டிக்கொண்டு சிங்கள அரசியலுக்குள் முழுமையாக சிக்கியுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஒரு இனமே அழிக்கப்பட்ட நாள் மே 18.அதனை யாராலும் மறுக்கவும் முடியாது
மன்னிக்கவும் முடியாது என்றும், இந்த இன அழிப்பானது சர்வதேசத்தின் உதவியுடன் திட்டமிட்டு
முன்னெடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version