Home இலங்கை சமூகம் யோகேந்திரநாதனுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

யோகேந்திரநாதனுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

0

ஈழத்தின் மூத்த படைப்பாளி நாட்டுப் பற்றாளர் நா.யோகேந்திரநாதனின் மறைவையொட்டிய
நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்று(06) கிளிநொச்சியில்(Kilinochchi) நடைபெற்றுள்ளது.

 கிளிநொச்சியில் அஞ்சலி

ஈழத்தின் இலக்கிய, நாடக, திரைப்பட மற்றும் வானொலித் துறைசார்ந்த பன்முக
ஆளுமையாளரான நா.யோகேந்திரநாதனின் கலைப்பணிகளின் கனதியை மதிப்பளித்து, அவரது
நினைவுகளை மீட்டும் வகையில்  இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வில்,
நா.யோகேந்திரநாதனின் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
மற்றும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளர்கள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள்,
ஊடகவியலாள்ர்கள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version