அன்ரன் பாலசிங்கத்தின் 19 வது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்றையதினம்(14) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியாவில் அஞ்சலி
நிகழ்வில் பொதுமக்கள்,நலன் விரும்பிகள், போராளிகுடும்பங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தமிழர் தாயகப்பகுதிகளில் பல இடங்களில் இவருக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
