Home இலங்கை சமூகம் திடீரென வீதியில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி: பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

திடீரென வீதியில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி: பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

0

பேருவளை பகுதியில் முச்சக்கரவண்டியை செலுத்திச்சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

இவ்வாறு உயிரிழந்தவர் புலத்சிங்கள கோவிந்த பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு நிலைய கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பேருந்தில் மீன் எடுத்துச்செல்ல வந்தவர் எனவும் முச்சக்கரவண்டியில் மூன்று மீன் பெட்டிகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version