Home இலங்கை சமூகம் முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை திருத்தும் போது முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் மக்கள்

மக்களை ஏற்றிச்செல்லும் இரண்டு இலட்சம் முச்சக்கர வண்டிகளில் இதுவரை மீட்டர்கள் பொருத்தப்படவில்லை எனவும், ஓரிரு ரூபாய் செலுத்தினால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும், முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் பலனை வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version