Home இலங்கை சமூகம் தமிழர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள் நினைவு கூரப்பட்டனர்

தமிழர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள் நினைவு கூரப்பட்டனர்

0

திருகோணமலை மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு
இன்றுடன் (04) 19 வருடங்கள் கடக்கின்றன இதனை நினைவுகூரும் முகமாக நினைவு
தினம் திருகோணமலையில் இன்று(04) இடம் பெற்றது.

 இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி
செலுத்தப்பட்டது.

 நீதி இன்றி ஏமாற்றப்பட்டு 19 வருடங்கள்

 இதன்போது கருத்து தெரிவித்த ராவண சேனா அமைப்பின் தலைவர்
கு.செந்தூரன் இலங்கை இராணுவத்தால் 17 தன்னார்வ ஊழியர்கள்
படுகொலை செய்யப்பட்டார்கள் இவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் நீதி இன்றி
ஏமாற்றப்பட்டு 19 வருடங்களை கடந்துள்ளது ஏமாற்றபடும் பட்டியலில் தான்
தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கிய ACF தன்னார்வ நிறுவனத்தில்
பணியாற்றிய 17 ஊழியர்கள் 2006 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.

 

NO COMMENTS

Exit mobile version