Home இலங்கை சமூகம் திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

0

Courtesy: H A Roshan

திருகோணமலை (Trincomalee) மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. 

இக்கூட்டமானது, இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

இதன்போது, கடந்த விவசாயக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புக்கள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.சுப்ரமணியம், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் கருணைநாதன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version