Home இலங்கை சமூகம் திருமலை புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

திருமலை புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

0

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17 இது தொடர்பில் விளக்கமளித்து பேசும் போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

  

காணி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை

இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையிலேயே வைக்குமாறு நாம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பும்  பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால்,அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின் படியே செயற்பட வேண்டியுள்ளது.இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அது தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்த நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றார். 

NO COMMENTS

Exit mobile version