Home இலங்கை சமூகம் திருகோணமலையில் தன்னார்வ தொண்டர் நிறுவன 17 ஊழியர்கள் படுகொலை நினைவேந்தல்

திருகோணமலையில் தன்னார்வ தொண்டர் நிறுவன 17 ஊழியர்கள் படுகொலை நினைவேந்தல்

0

மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (04) 19 வருடங்கள் கடக்கின்றன.

இதனை நினைவுபடுத்தும் முகமாக நினைவு
தினம் திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி
செலுத்தப்பட்டது.

 19 வருடங்கள் 

இங்கு கருத்து தெரிவித்த ராவண சேனா அமைப்பின் தலைவர்
கு.செந்தூரன், இலங்கை இரானுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள்
படுகொலை செய்யப்பட்டார்கள் இவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் நீதி இன்றி
ஏமாற்றப்பட்டு 19 வருடங்களை கடந்துள்ளன. 

ஏமாற்றபடுப் பட்டியலில் தான்
தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

பிரான்ஸ் நாட்டை தலைமையக கொண்டு இயங்கிய குறித்த தன்னார்வ நிறுவனமான ACF
பணியாற்றிய 17 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு நிலவிய யுத்த
சூழ்நிலை காரணமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version