Home இலங்கை சமூகம் வழமைக்குத் திரும்பவுள்ள திரிபோஷ உற்பத்தி

வழமைக்குத் திரும்பவுள்ள திரிபோஷ உற்பத்தி

0

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும் 05 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் திரிபோஷா வழங்கப்படுகிறது.

சோளத்தை இறக்குமதி செய்ய..

திரிபோஷ உற்பத்திக்காக சோளம் மற்றும் சோயா போஞ்சி மூலப்பொருட்களாக பாவிக்கப்படுகின்றன.

இலங்கை திரிபோஷா லிமிட்டெட் நிறுவனத்தின் வருடாந்த சோளத்தின் தேவை 18,000 மெட்ரிக் தொன்கள் ஆகும் என்பதுடன், மாதாந்த தேவை 1,500 மெட்ரிக் தொன்கள் ஆகும்.

இந்நிலையில் திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version