Home இலங்கை குற்றம் ரிப்போலி பிளட்டூனின் நிழல் நடவடிக்கைகள் – கத்தோலிக்க பாதிரிகளுக்கு கசிந்த இரகசியம்!

ரிப்போலி பிளட்டூனின் நிழல் நடவடிக்கைகள் – கத்தோலிக்க பாதிரிகளுக்கு கசிந்த இரகசியம்!

0

2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் இணை பேராலயத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

‘TMVP’ என்ற ஆயுதக் குழுவே இந்த படுகொலைக்கு காரணம் எனக் கூறி குறித்த குழுவின் தலைவர் பிள்ளையான் மற்றும் படுகொலைக்கு சாட்சியாக இருந்த கஜன் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும், கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பிள்ளையான் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அறுவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் ஐ.நாவிடம் வாக்குமூலம் வழங்க இருந்த கஜன் மாமாவும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

குறித்த கஜன் மாமா, இலங்கை புலனாய்வு பிரிவினர் உருவாக்கிய ரிப்போலி பிளட்டூன் என்ற கொலை குழுவிலும் இணைக்கப்பட்டிருந்தார்.

எனினும், பின்னாளில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பாதிரியர்களிடம் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விடயங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version