Home அமெரிக்கா அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0

அமெரிக்காவிற்கு பணக்கார வெளிநாட்டினரை ஈர்க்க புதிய விசாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்

அதன்படி, அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்ட் கார்ட்’ (Gold Card) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார்.

அந்தவகையில், அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது.

5 மில்லியன் டொலர்கள்

இந்த நிலையில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்ட் கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version