Home விளையாட்டு செல்சியா கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் நடனமாடிய ட்ரம்ப்

செல்சியா கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் நடனமாடிய ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செல்சியா கால்பந்து அணியின் வெற்றி கோப்பை கொண்டாட்டங்களில் நடனமாடி கொண்டாடிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நியூஜெர்சியிலுள்ள மெட்லைஃப் விளையாட்டரங்கில் செல்சியா மற்றும் பாரிஸ் செயின்ட் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில், செல்சியா அணி வெற்றிபெற்ற பின்னர் அந்த அணியின் கொண்டாட்ட நிகழ்வில் ட்ரம்ப் நடனமாடியுள்ளார்.

செல்சியா அணியின் தலைவர் ரீஸ் ஜேம்ஸுக்கு கோப்பையை வழங்கிய பிறகு, ட்ரம்ப் மேடையில் நின்று, வீரர்களுடன் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். 

சர்வதேச கால்பந்து நிகழ்வு

இந்த நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் நியூஜெர்சியிலுள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் முக்கிய பிரமுகர்களாக (VIPs) கலந்துகொண்டனர்.

இந்த உயர்மட்ட சர்வதேச கால்பந்து நிகழ்வில் அவரது முக்கியத்துவத்தையும், செல்சியாவின் வெற்றியை உலக அளவில் பிரபலப்படுத்தும் வாய்ப்பையும் பயன்படுத்துவதற்காக இருக்கலாம் என்று சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

மேலும், ட்ரம்ப் கால்பந்து விளையாட்டில் தனிப்பட்ட ஆர்வத்தை இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதாரணமாக, FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோவுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருப்பதாகவும், FIFA அமைப்பு அமெரிக்காவில் ட்ரம்ப் டவரில் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அண்மையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திட்ட உதைப்பந்தாட்ட ஆடையை ட்ரம்ப் பெற்றிருந்தமை கால்பந்து விளையாட்டில் உள்ள ஆர்வத்தை மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version