Home அமெரிக்கா இலங்கையில் செலவிட்ட பல மில்லியன் டொலர்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம்

இலங்கையில் செலவிட்ட பல மில்லியன் டொலர்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம்

0

இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு கற்கை நெறி ஒன்றை வழங்குவதற்காக, யுஎஸ்எய்ட் நிதியம், 7.9
மில்லியன் டொலர்களை செலவிட்டதற்காக ட்ரம்ப் நிர்வாகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ Rapid Response சமூக ஊடகப் பதிவின் மூலம்
ட்ரம்ப் நிர்வாகம் கேள்வி எழுப்பிய பல திட்டங்களில் இந்த திட்டமும்
அடங்குகிறது.

USAID நிதியுதவி

இலங்கையில் ஊடக நெறிமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட USAID நிதியுதவி பெற்ற திட்டம், ஊடகவியலாளர்கள் “பைனரி-பாலின மொழியை” எவ்வாறு
தவிர்ப்பது என்பதைக் கற்பிப்பதற்காக 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் யுஎஸ்எய்ட் நிறுவனம், பல தசாப்தங்களாக முற்றிலும் பொறுப்பற்றதாக
உள்ளது, யாருக்கும் பதிலளிக்காத நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட அதிகாரிகளால்
நடத்தப்படுகிறது என்று Rapid Response தெரிவித்துள்ளது. 

இதேவேளை யுஎஸ்எய்ட் நிதி தற்போது உலகளாவிய ரீதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version