Home உலகம் அடங்க மறுக்கும் ட்ரம்ப் : மற்றுமொரு அதிரடி உத்தரவு

அடங்க மறுக்கும் ட்ரம்ப் : மற்றுமொரு அதிரடி உத்தரவு

0

அமெரிக்காவில்(us) அனைத்து பாரவூர்தி சாரதிகளுக்கும் ஆங்கில பேச்சு புலமை கட்டாயம்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப்(donald trump) உத்தரவிட்டுள்ளார்.அவரின் இந்த உத்தரவு விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

இது குறித்த உத்தரவில் கூறி இருப்பதாவது,

சமரசம் செய்ய முடியாத பாதுகாப்புத் தேவை

சாரதிகளுக்கு ஆங்கிலத்தில் புலமை என்பது ஒரு சமரசம் செய்ய முடியாத பாதுகாப்புத் தேவையாக இருக்க வேண்டும். அவர்கள் சாலையில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான எச்சரிக்கை குறிப்புகளை படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

எல்லை ரோந்து பணி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் எளிதாக பேச முடியும்.

இது பொது அறிவு. புதிய போக்குவரத்து நிர்வாக சட்டத்தின் படி, அமெரிக்க பாரவூர்தி சாரதிகள் ஆங்கிலத்தில் முறையாக தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

              

NO COMMENTS

Exit mobile version