Home இலங்கை இலங்கை மீதான 30 சதவீத வரியை குறைத்த ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு

இலங்கை மீதான 30 சதவீத வரியை குறைத்த ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு

0

இன்று (2025.08.01) முதல் நடைமுறைக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30 சதவீதமான தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா (USA) 20 சதவீதம் ஆகக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35 இலிருந்து 20 சதவீதம் ஆகவும், பாகிஸ்தானுக்கு 30 இலிருந்து 19 சதவீதம்ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு 

இந்தியாவிற்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் பங்காளதேஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரிக்கு ஒத்ததாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீதம் வரி வீதம் 10 சதவீதம் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும் வரி வீதம் 15 சதவீதம் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41சதவீதம் வரி விதிக்கப்படும் அதேவேளை லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகள் 10 சதவீதம் அடிப்படை வரியை எதிர்கொள்ளும், அதேவேளை கனடாவின் ஏற்றுமதிகள் மீதான வரி 25 சதவீதம் இலிருந்து 35 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version