Home இலங்கை அரசியல் ரஷ்யாவை வீழ்த்துவதில் ட்ரம்பின் முக்கிய சதிகள் அம்பலம்..!

ரஷ்யாவை வீழ்த்துவதில் ட்ரம்பின் முக்கிய சதிகள் அம்பலம்..!

0

ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி பேச்சு மோதலுக்கு பின்னர், உக்ரைன் – ரஷ்ய போரில் அமெரிக்காவின் தலையீட்டுடன் பல்வேறு திருப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. 

இது சர்வதேச ரீதியில் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் உலகளவில் பல கோணங்களில் ஆராயப்பட்டு வருகின்றது. 

அதேவேளை, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நடவடிக்கைகள் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படும் அதேநேரம், ஐரோாப்பிய நாடுகள் பலவற்றின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார். 

அந்தவகையில், ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் முரண்பாட்டில் ஈடுபட்டமை அமெரிக்காவுக்கு பெரியதொரு கௌரவ பிரச்சினை என கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் கிருஸ்ணர் தெரிவிக்கின்றார். 

அது மாத்திரமன்றி, இந்நிகழ்வு மூலம் ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்ய மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை மறைமுகமாக தெரிவிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழச்சி, 

NO COMMENTS

Exit mobile version