Home இலங்கை பொருளாதாரம் ட்ரம்பின் வரியில் சிக்கிய இலங்கை.. காத்திருக்கும் பெரும் ஆபத்து!

ட்ரம்பின் வரியில் சிக்கிய இலங்கை.. காத்திருக்கும் பெரும் ஆபத்து!

0

அமெரிக்கா அறிவித்துள்ள தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர வரி விதிப்பில், அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கைக்கு 44 சதவீத பரஸ்பர வரியை அறிவித்துள்ளார். 

இன்றைய தினம், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், உலக நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புக்களை நேரலையில் வழங்கியிருந்தார். 

பரஸ்பர வரி பட்டியல் 

இதன்போது, அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளை கொண்ட வரி விதிப்பு பட்டியல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. 

அதில், பிற நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரி வீதமும், அமெரிக்கா அதற்கு விதிக்கவுள்ள தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர வரி வீதமும் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

அதற்கமைய, அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, இலங்கைக்கு 44 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். 

அதேவேளை, பிரித்தானியாவுக்கு 10 வீதம், இந்தியாவுக்கு 26 வீதம் மற்றும் சீனாவுக்கு 34 வீதம் என அனைத்து நாடுகளுக்குமான வரி விதிப்புக்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. 

அமெரிக்காவின் வரி விதிப்பு, உலகில் வர்த்தக போரை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையிலும் இலங்கையில் தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ட்ரம்பின் அறிவிப்பு பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version