Home அமெரிக்கா மிக விரைவில் தாக்குதல்..! ஈரானின் முக்கிய தளத்தை குறிவைக்கும் ட்ரம்ப்

மிக விரைவில் தாக்குதல்..! ஈரானின் முக்கிய தளத்தை குறிவைக்கும் ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் “Pickaxe Mountain” பகுதியை அமெரிக்கா “வெகு விரைவில்” தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிவைக்கும் ட்ரம்ப்

ஈரானில், கடுமையாக சேதமடைந்துள்ள Natanz யுரேனியம் செறிவூட்டல் நிலையத்திற்கு அருகில் Pickaxe Mountain அமைந்துள்ளது.

இந்தப் பகுதி மிகவும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டதாக தெரிவிக்கப்படுவதுடன், ஆழமாக பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சுரங்கத் தொகுதிகள் அங்கு இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

Source: https://tamilwin.com/article/trump-says-us-may-hit-iran-pickaxe-mountain-soon-1788557211

NO COMMENTS

Exit mobile version