Home உலகம் உக்ரைன் விவகாரம் : புடினுடனான பேச்சுக்கு பின்னர் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரைன் விவகாரம் : புடினுடனான பேச்சுக்கு பின்னர் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

0

உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதல் மற்றும் ஈரான் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஒரு “நல்ல உரையாடல்” நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (04)தெரிவித்தார்.

ரஷ்யாவிற்குள் உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து,ரஷ்யா “விமானநிலையங்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டும்” என்று புடின் தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

உடனடி அமைதிக்கு வழிவகுக்காது

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொலைபேசி அழைப்பு “உடனடி அமைதிக்கு வழிவகுக்காது” என்றும் ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் எச்சரித்தார்.

இரு தலைவர்களும் ஈரான் குறித்தும் விவாதித்தனர், மேலும் புடின் அந்த நாட்டுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version