Home இலங்கை அரசியல் ட்ரம்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி.. ஜனாதிபதி அநுர மீது குற்றச்சாட்டு

ட்ரம்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி.. ஜனாதிபதி அநுர மீது குற்றச்சாட்டு

0

அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு குறைந்த வரிகளை விதிக்க இலங்கை தவறியதற்கு, பலவீனமான மற்றும் சுயநல பேச்சுவார்த்தைகளே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். 

இலங்கைப் பொருட்களுக்கு நேற்று விதிக்கப்பட்ட 30வீத அமெரிக்க வரி தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர்,

“இலங்கை ஏற்றுமதிகள் மீது 30வீத அமெரிக்க வரி விதிப்பது என்பது மோசமான பேச்சுவார்த்தைக்கு நாம் கொடுக்கும் விலை.

பலவீனமான பேச்சுவார்த்தை 

எங்கள் தன்முனைப்பு ஒவ்வொரு கூட்டாளி நாட்டையும், ஒவ்வொரு நிபுணர் கையையும் பெறுவதை தடுத்தது, இப்போது கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதிகள் சமநிலையில் உள்ளன. 

சிக்கலான நிஜ உலக பேச்சுவார்த்தைகளுக்கு பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பது சிறந்ததல்ல என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்” என்னும் வகையில் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் மாதத்தில் 44வீதமாக இருந்த அதிகரித்த கட்டணங்களின் தாக்கம் குறித்து ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளிடையே அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவிடம் இருந்து இந்தக் கருத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version