Home இலங்கை சமூகம் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சுனாமி பேரலையின் நினைவேந்தல்கள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சுனாமி பேரலையின் நினைவேந்தல்கள்

0

சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள், நேற்றையதினம்(26.12.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த்தேசத்தில் சுனாமிப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள்
பற்றி கருத்துரையாடப்பட்டுள்ளது.

மலர் அஞ்சலி

அத்துடன், உயிரிழந்தவர்களுக்காக ஒளிச்சுடர் ஏற்றி
மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா  

சுனாமி பேரலை ஏற்­பட்டு 20 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன
2004ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனா­மியால் உயி­ரி­ழந்த மக்­களை நினைவு
கூரும் முக­மாக நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் விசேட நினைவு கூறும் நிகழ்வு நேற்று(26) இடம்பெற்றுள்ளது. 

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நடைபெற்ற இவ்விழா,
தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பமானது.

இதில் காலை 9.25 மணி­முதல் 9.27 மணி­வரை சுனாமி உட்­பட வெவ்­வேறு
அனர்த்­தங்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிடம்
மௌன அஞ்­சலி செலுத்­தப்­ப­டதுடன் சர்வமத வழிபாடுகளும் நடைபெற்றுள்ளது. 

செய்தி – திவாகரன்

NO COMMENTS

Exit mobile version