Home இலங்கை சமூகம் காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

0

காசல் மகளிர் வைத்தியசாலையில் இந்த வாரத்தில் ஒட்டிய நிலையில் இரட்டைப் பெண்
குழந்தைகள் பிறந்ததை வைத்தியசாலை உறுதி செய்துள்ளது.

வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் அஜித தந்தநாராயண கூற்றுப்படி, பன்னலவைச்
சேர்ந்த 29 வயதுடைய தாய்க்கு அறுவைச் சிகிச்சை மூலம் இந்த குழந்தைகள்
பிறந்தன.

ஒரு குழந்தையின் எடை 2.2 கிலோ கிராம் என்றும், இரட்டையர்களின் மொத்த எடை 4.4
கிலோ கிராம் என்றும், இருவரும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தைகள் வயிற்றுப் பகுதியில் ஒட்டிப் பிறந்துள்ளன.

வரலாற்றில் இங்கு ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்

இந்த நிலையில், மேலும் சுமார் மூன்று மாதங்களில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்
வைத்தியசாலையில் அவர்களைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளது.

காசல் வீதி வைத்தியசாலையில் இரட்டைப் பிறப்புகள் வழக்கமானவை என்றாலும், அண்மைய
வரலாற்றில் இங்கு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறப்பது இதுவே முதல்
முறை என்று வைத்தியர் அஜித் தன்தநாராயண குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version