ஹாலிவுட்டில் சில படங்களின் அடுத்த பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு படமாக வெளியாகியுள்ள Now You See Me: Now You Don’t திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.
கதைக்களம்
டேனி அட்லாஸ், ஜேக், மெரிட், ஹென்லி ஆகியோர் இணைந்து ஒரு பெரிய மேஜிக் ஷோ நடத்துகின்றனர்.
அதில் கிரிப்டோகரண்சி மூலம் மோசடி செய்யும் நபர் ஒருவரும் கலந்துகொள்கிறார்.
அந்த மேஜிக் ஷோவில் அவரை தங்க செல்போன் மேடையில் ஏறும் ஒரு நபரின் கைக்கு வருகிறது.
மேஜிக்கால் வந்ததாக அட்லாஸ் குழு அவரிடம் கூற திகைத்து நிற்கிறார். சிறிது நேரத்திலேயே பங்கேற்பாளர்களின் வங்கி கணக்குகளுக்கு அந்த போனில் இருந்து பணம் அனுப்படுகிறது.
பின்னர் மேஜிக் ஷோ முடிந்துவிட்டதாக மேடையில் இருந்த அனைவரும் மாயமாக மறைந்துவிடுகின்றனர். அதற்கு முன்பே மேடையில் ஏறி வசியம் செய்யப்பட்ட நபர் ஒன்றும் புரியாமல் கீழே இறங்கி, கூட்டத்தினுள் கலந்து சென்றுவிடுகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மோசடி நபர் வேகமாக மேடைக்கு சென்று பார்த்தபோதுதான் அங்கு ஹாலோகிராம் டெக்னலாஜியைப் பயன்படுத்தி ஆட்களே இல்லாமல் போலி மேஜிக் ஷோ நடத்தப்பட்டது தெரிய வருகிறது.
அதனை நடத்தியவர்கள் சார்லி, போஸ்கோ மற்றும் ஜூன் என்ற பெண் ஆகிய மூவரும் சேர்ந்த கூட்டணிதான்.
அவர்கள் தங்கள் ரகசிய இடத்திற்கு செல்ல, அங்கு மேஜிக் கலைஞரான அட்லாஸ் தோன்றி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அவர், வான்டெர்பெர்க் நிறுவனத்தின் உரிமையாளர் வெரோனிகாவிடம் இருக்கும் விலையுயர்ந்த வைரத்தை கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு, தங்களுடன் கைகோர்க்குமாறு மூவரிடமும் கேட்கிறார்.
முதலில் மறுத்து பின்னர் அவர்களும் அதற்கு ஒப்புக்கொள்ள அட்லாஸின் குழு மீண்டும் ஒன்றிணைகிறது. அதன் பின்னர் அவர்கள் வைரத்தை கொள்ளையடித்தார்களா? அவர்கள் குழுவிற்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஸோம்பிலேண்ட், வெனோம், அன்சார்ட்டேட் படங்களை இயக்கிய ரூபன் பிளெய்ஸ்ச்சர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
முதல் காட்சியையே ட்விஸ்ட் ஆக ஆரம்பித்து மிரட்டியிருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட டெக்னாலாஜியை வைத்து படம் முழுக்க மேஜிக் செய்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்.
அதன் பின்னர் பரபரப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை மோர்கன் ப்ரீமனின் அறிமுகத்திற்கு பின் சற்று தொய்வாகிறது.
ஆனாலும் அங்கு நடக்கும் சண்டைக்காட்சி சிறப்பு. வெரோனிகாவிடம் இருந்து வைரத்தை திருடுவது காதில் பூ சுற்றும் கதை என்றாலும் ரசிக்க முடிகிறது.
லூலா, ஹென்லி, அட்லாஸ், ஜேக் ஆகியோர் ஒன்றிணையும் இடம் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ்தான்.
கிளைமேக்சிலும் சர்ப்ரைஸாக ஒரு கேமியோ உள்ளது.
ஜஸ்டிஸ் ஸ்மித் (சார்லி), டோமினிக் செஸ்ஸா (போஸ்கோ), அரியானா க்ரீன்ப்ளாட்ட (ஜூன்) கூட்டணி புதிதாக வந்திருந்தாலும், தங்களால் முடிந்த நல்ல நடிப்பை தந்துள்ளனர்.
படத்தில் வரும் பெரும்பாலான மேஜிக் ட்ரிக்கள் நம்மை அட என்று கூறவைக்கின்றன. குறிப்பாக கிளைமேக்ஸ் பிளாஸ்ட் என்றே கூறலாம். அட்லாஸ் குழுவை விட, சார்லி குழுதான் அதிக ஸ்கோர் செய்துபோல் காட்சிகள் வருவது இந்த சீரிஸின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம்.
வெரோனிகாவாக நடித்திருக்கும் ரோசாமுன்ட் பைக் பெரிய நிறுவனர் கதாபாத்திரத்தில் மிடுக்காக நடித்துள்ளார். மோர்கன் ப்ரீமன் வரும் காட்சி கண்டிப்பாக ரசிகர்களுக்கு சற்று கலக்கம் தரும்.
முந்தைய படங்களுடன் இதனை ஒப்பிட்டால் சற்று குறைவுதான் என்றாலும், பெரிதாக குறைகள் இல்லாதது ஆறுதல். ஆனால் காட்சிகள் கண்களை கவரும்.
க்ளாப்ஸ்
நடிகர்களின் நடிப்பு
ஒரு சில மேஜிக் ட்ரிக்ஸ்
சண்டைக்காட்சிகள்
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
பல்ப்ஸ்
ஒரு சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைவது
இன்னும் பெரிய சம்பவம் செய்திருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கதை
மொத்தத்தில் இந்த Now You See Me: Now You Don’t ஒரு நல்ல மேஜிக் ஷோதான். கண்டிப்பாக குழந்தைகளுடன் சென்றே இப்படத்தை ரசிக்கலாம்.
