கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் மான் இறைச்சி கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (10.04.2025) பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 20 கிலோகிராம் நிறையுடைய மான் இறைச்சி கடத்தி செல்லப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
சந்தேகநபர்கள் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுதத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
