Home இலங்கை குற்றம் கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது

0

கொழும்பு (Colombo) – ஒருகொடவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இரு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒருகொடவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 150 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரிடம் இருந்து 12 கிராம் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம் 

மேலும், சந்தேகநபர்களில் ஒருவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 98,700 ரூபா பணம், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய ஒருகொடவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/two-arrested-in-colombo-by-police-with-drugs-1723700445

NO COMMENTS

Exit mobile version