வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு
சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை
மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில்
உள்ள ஆற்றோர வயல்வெளியில் நேற்று(7) இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
கைதான சந்தேக நபர்கள்
கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு
கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது சுமார் 23 மற்றும் 26 வயதுடைய வீரமுனை
பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களை 40 000 மில்லி லீட்டர் கசிப்புடன் கைது
செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் உட்பட சான்றுப்பொருட்கள் காரைதீவு
பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக
ஒப்படைத்துள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை
அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா பணிப்புரைக்கமைய விசேட அதிரடிப்படை
அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
